FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆர்யா - 40 பெயர் டீசர்!

ஆர்யாவின் 40-வது திரைப்பட பெயர் டீசர் வெளியானது...

12 அக்டோபர் 2026, 5:59 pm IST
பகிர்:

நடிகர் ஆர்யாவின் 40-வது திரைப்படத்தின் பெயர் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர் ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக தோல்விப்படமானது.

தற்போது, பா. இரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இந்தாண்டு இறுதியில் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

தொடர்ந்து, இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் தன் 40-வது திரைப்படத்தில் ஆர்யா நடித்து வந்தார். ராஜா ராணி திரைப்படம் போல் காதல் திரைப்படமாக உருவாகும் இதில், நாயகிகளாக நடிகைகள் நிகிலா விமலும் வைஷ்ணவி சைதன்யாவும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்திற்கு ஹலோ காதல் எனப் பெயரிட்டுள்ளதாக டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். மேலும், இப்படம் வருகிற டிச. 4 ஆம் தேதி வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

The title teaser for actor Arya's 40th film has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments