முகப்பு

ஆர்யாவின் ஹலோ காதல் டிரைலர்!

நடிகர் ஆர்யாவின் ஹலோ காதல் டிரைலர் வெளியீடு...

ஆர்யாவின் ஹலோ காதல் டிரைலர்!
பகிர்:

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான ரொமான்ஸ் திரைப்படமான ஹலோ காதல் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக தோல்விப்படமானது.

தற்போது, பா. இரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வேட்டுவம் இந்தாண்டு இறுதியில் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, சர்பட்டா - 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் ’ஹலோ காதல்’ என்ற படத்தில் ஆர்யா நடித்துள்ளார். ஆர்யாவின் 40-வது திரைப்படமான இதில் நாயகிகளாக நடிகைகள் நிகிலா விமலும் வைஷ்ணவி சைதன்யாவும் நடித்துள்ளனர். காதல் திரைப்படமாக ஜாலியான கதையாக உருவாகியுள்ளது.

இப்படம் டிச. 4 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதன் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.

The trailer for the romance film Hello Kadhal, starring actor Arya, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.