சல்மான் கானின் மாத்ருபூமி திரைப்பட டிரைலர்!
சல்மான் கானின் மாத்ருபூமி டிரைலர்...
நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவான மாத்ருபூமி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் சல்மான் கான் பாலிவுட்டின் முன்னணி கான்களில் ஒருவர். பல ஆண்டுகளாக சினிமாவில் இருப்பதால் பாலிவுட் திரைத்துறையில் தனித்துவமான நடிகராகவும் எப்போதும் சர்ச்சைகள் சூழவும் வலம் வருகிறார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான சிக்கந்தர் தோல்விப்படமானது.
Advertisement
Advertisement
மேலும், பல திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். தற்போது, இயக்குநர் வம்சி படிபள்ளி இயக்கத்தில் நடிகை நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இயக்குநர் அபூர்வா லஹியா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான மாத்ருபூமி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஹிமேஷ் ரேசாமியா இசையமைத்துள்ளார். ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படம் இந்தியா - சீனா ஆக்கிரமிப்பு பகுதிகளில் நடைபெறும் போர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில், சல்மான் கான் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார்.