FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நடிகா் டைகா் ஷ்ராஃப் சுடப்பட்டது ஏன்? 'பாலிவுட் திரையுலகின் புலி' சல்மான் கான் காரணமா?

பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் காரணம் குறித்து கைது செய்யப்பட்டோர் வாக்குமூலம் அளித்தது பற்றி...

சல்மான் கான் | டைகர் ஷ்ராஃப்
பகிர்:

பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் காரணம் குறித்து கைது செய்யப்பட்டோர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மும்பையின் ஜுஹு பகுதியில் கடந்த 18-ஆம் தேதி ஹிந்தி நடிகா் டைகா் ஷ்ராஃப் மீது மோட்டாா் சைக்கிள்களில் வந்த மூவா் துப்பாக்கியால் சுட்டனா்.

இதில் டைகா் ஷ்ராஃப் காயமின்றி உயிா் தப்பினாா். அவரின் காா் ஓட்டுநரும், பாதசாரி ஒருவரும் காயமடைந்தனா். இந்த சம்பவத்தின்போது டைகா் ஷ்ராஃபை குறிவைத்து 5 முதல் 6 முறை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த சம்பவம் தொடா்பாக ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் இதுவரையில் 10 போ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த கொலை முயற்சிக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்ற நிலையில், சம்பவம் தொடர்பாக அனில் பண்டித் என்பவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, கைது செய்யப்பட்டோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாலிவுட் நடிகர் சல்மான் கானை டைகர் ஷ்ராஃப் புகழ்ந்து பேசியதாலேயே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிய வந்தது.

2022 ஆம் ஆண்டில் ஒரு படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், சல்மான் கானை பாலிவுட் திரையுலகின் புலி என டைகர் ஷ்ராஃப் புகழ்ந்து பேசியதால், அவரை கொலை பிஷ்னோய் கும்பல் திட்டமிட்டு வந்ததாகவும், இதன் தொடர்ச்சியாகவே தற்போது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதாகவும் கைது செய்யப்பட்டோரின் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.

summary

Tiger Shroff targeted for praising Salman Khan in 2022, shooter tells police

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments