மும்பையில் நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச் சூடு! 3 பேர் கைது
மும்பையில் நடிகர் டைகர் ஷ்ராஃபை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...
மும்பையில் நடிகர் டைகர் ஷ்ராஃபை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேரைக் கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிடிபட்டவர்களில் ஒருவர் மகாராஷ்டிரத்தையும் மற்ற இருவர் ராஜஸ்தானையும் சேர்ந்தவர்கள் ஆவர். ராஜஸ்தான் காவல் துறை மற்றும் சிறப்பு அதிரடிப் படை இணைந்து நடத்திய நடவடிக்கையின் மூலம், கோட்டா ரயில் நிலையத்தில் இவர்கள் பிடிபட்டனர்.
இவர்கள் மும்பையிலிருந்து தில்லிக்குச் சென்றுகொண்டிருந்தபோது காவல் துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. எனினும், ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் இவர்கள்தானா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே, இவர்களை மும்பை அழைத்து வந்து விசாரணை நடத்த காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
பாலிவுட் டைகர் ஷ்ராஃப் ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பை ஜூஹூவில் உள்ள புஷ்பா பூங்காவில் கால்பந்து விளையாடிவிட்டு காரில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்தவர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் டைகர் ஷ்ராஃப் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பிய நிலையில் அவரின் கார் ஓட்டுநர் மீது தோட்டா பாய்ந்து காயமடைந்தார்.
அத்துடன் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநருக்கும் காயம் ஏற்பட்டது. மொத்தம் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்ததாகக் கூறப்படும் நிலையில் அவர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். தப்பிச்சென்ற அவர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கு ரௌடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது.
எனினும், இதை காவல் துறை உறுதிப்படுத்தவில்லை. இதுதொடர்பான விசாரணைக்கு 15 காவல் துறை குழுக்கள் தனியே அமைக்கப்பட்டுள்ளன.
Three individuals allegedly involved in the assassination attempt on Tiger Shroff have been apprehended at the Kota railway station in Rajasthan. They were reportedly intercepted while travelling by train.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.