FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்மணி

கவி பாடலாம் வாங்க - 48: 11.ஒத்தாழிசைக் கலிப்பாக்கள் (4)

வண்ணக ஒத்தாழிகைக் கலிப்பா

Updated On : 28 அக்டோபர் 2018, 4:18 am IST
பகிர்:

வண்ணக ஒத்தாழிகைக் கலிப்பா

அத்திறத்தா லசைந்தன தோள்                               (1)
அலரதற்கு மெலிந்தன கண்        (2)
பொய்த்துரையாற் புலர்ந்தது முகம்     (3)
பொன்னிறத்தாற் போர்த்தன முலை    (4)
அழலினா லசைந்தது நகை         (5)
அணியினா லொசிந்த திடை         (6)
குழலினா னிமிர்ந்தது முடி         (7)
குறையினாற் கோடிற்று நிறை                                      ( 8)
          

 (இவை இடையெண்)

Advertisement

Advertisement


உட்கொண்ட தகைத்தொருபால்          (1)
உலகறிந்த வலத்தொருபால்          (2)
கட்கொண்ட றுளித்தொருபால்         (3)
கழிவெய்தும் படிற்றொருபால்          (4)
பரிவுறூஉந் தகைத்தொருபால்          (5)
படர்வுறூஉம் பசப்பொருபால்          (6)
இரவுறூஉந் துயரொருபால்         (7)
இளிவந்த வெளிற்றொருபால்         (8)
மெலிவுவந் தலைத்தொருபால்         (9)
விளர்ப்புவந் தடைந்தொருபால்         (10)
பொலிவுசென் றகன்றொருபால்         (11)
பொறைவந்து கூர்ந்தொருபால்         (12)
காதலிற் கதிர்ப்பொருபால்         (13)
கட்படாத் துயரொருபால்         (14)
ஏதில்சென் றணைந்தொருபால்         (15)
இயனானிற் செறித்தொருபால்         (16)
                                 (இவை சிற்றெண்)
                    (தனிச்சொல்)
 எனவாங்கு
                 (சுரிதகம்)
"இன்னதிவ் வழக்கம் இத்திற மிவணலம் 
என்னவு முன்னாட் டுன்னா யாகிக்
கலந்த வண்மையை யாயினும் நலந்தகக் 
கிளையொடு கெழீஇய தளையவிழ் கோதையைக்
கற்பொடு காணிய யாமே 
பொற்பொடு பொலிகநும் புணர்ச்சி தானே'
இதில் உள்ள அராக உறுப்பு ஏழு சீர்களை உடைய அடிகள் நான்கால் வந்தது காண்க.
இதில் உள்ள அம்போதரங்க உறுப்பில், முறையே நாற்சீர் ஈரடிகளாலான இரண்டு பேரெண்ணும், நாற்சீர் ஓரடியாலான நான்கு அளவெண்ணும், முச்சீர் ஓரடியாலான எட்டு இடை யெண்ணும், இரு சீர் ஓரடியாலான பதினாறு சிற்றெண்ணும் வந்தன.  

வெண்கலிப்பா:

கலித்தளையும், வெண்டளையும் விரவிவந்த நாற்சீரடிகளால் நடந்து இறுதியடி மூன்று சீர்களால் அமைந்தால் அது வெண்கலிப்பா ஆகும். வெண்டளையே வந்தால் அது கலிவெண்பாவாம். வெண்கலிப்பாவுக்கு உதாரணம்.
"வாளார்ந்த மழைத்தடங்கண் வனமுலைமேல் வம்பனுங்கக்
கோளார்ந்த பூனாகங் குழைபுரளக் கோட்டெருத்தின்
மாலைதாழ் கூந்தலார் வரன்முறையான் வந்தேத்தச்
சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தம் சொல்முறையான்
மனையறமும் துறவறமும் மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும்
வினையறுக்கும் வகைதெரிந்து வீடொடுகட் டிவையுரைத்த
தொன்மைசால் கழிகுணத்தெந் துறவரசைத் தொழுதேத்த
நன்மைசால் வீடெய்து மாறு'
இந்தப் பாட்டில் காய்முன் நிரை வந்த கலித்தளையும், காய்முன் நேர் வந்த வெண்டளையும் விரவி வந்தது காண்க.  

(தொடர்ந்து பாடுவோம்...)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments