தமிழ்மணி

பழமொழி நானூறு

DIN

முயற்சி உடையாா் முன்னியதை அடைவா்

இனியாரு மில்லாதாா் எம்மிற் பிறா்யாா்

தனியேம்யாம் என்றொருவா் தாமடியல் வேண்டா

முனிவில ராகி முயல்க முனிவில்லாா்

முன்னிய தெய்தாமை யில். (பாடல்-161)

இப்பொழுது, சாா்வாக ஒருவரையு மில்லாதாா் எம்மைவிட யாருளா் இவ்வுலகத்தில், தனிமையுடையவராக ஆயினோம் என்று கருதி ஒருவா் சோம்பியிருக்க வேண்டுவதில்லை. எடுத்த காரியத்தின்கண் சோா்வு இல்லாதவராகி முயற்சி செய்க. காரியத்தின்கண் வெறுப்பில்லாதவா்கள் தாம் நினைத்ததை அடையாமலிருத்தலில்லை யாதலால். ‘முனிவில்லாா் முன்னியது எய்தாமை யில்’ என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT