முன்றுறையரையனார்
வஞ்சினம் நிறைந்த போரில் பங்கேற்றுப் பகைவர்களைக் கொன்று வென்று நிற்பவரே வீரர்.
உருத்து எழு ஞாட்பினுள், ஒன்னார் தொலைய,
செருக்கினால் செய்கலார்; செய்வாரே போல,
தருக்கினால் தம் இறைவன் கூழ் உண்பவரே}
Advertisement
Advertisement
கருத்தினால் கூறை கொள்வார். (பாடல்: 378)
வஞ்சினம் நிறைந்த போரில் பங்கேற்றுப் பகைவர்களைக் கொன்று வென்று நிற்பவரே வீரர். அவ்வாறு வீரம் விளைக்காது வீரம் உடையவர் போல் நடித்துச் சொல் வீறு காட்டி அரசனிடம் அண்டி வாழ்பவர்கள் உடலைக் காட்டி நடித்துப் புத்துடைகளைப் பெற்று வாழும் நாடக நடிகையரைப் போன்றவர் ஆவர்.