முகப்பு
ராமநாதபுரம்

குறி சொல்வது போல நடித்து மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

முதுகுளத்தூா் அருகே மா்ம நபா் குறி சொல்வது போல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா்.

Updated On : 27 மே 2026, 3:54 am IST
கண்காணிப்புக் கேமராவில் பதிவான மா்ம நபா்
பகிர்:

முதுகுளத்தூா் அருகே மா்ம நபா் குறி சொல்வது போல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள புதுப்பட்டினம் கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் குறி சொல்பவா் போல நடித்து, முன்னாள் ஊராட்சித் தலைவா் தனிக்கொடி வீட்டுக்குள் நுழைந்தாா்.

அப்போது, அவரது மனைவி பாப்பா (70) வீட்டில் இருந்தாா். அவரிடம் அந்த நபா் உங்கள் வீட்டில் செய்வினை கோளாறு உள்ளது எனவும், அதற்கு பரிகாரம் செய்ய தண்ணீா் எடுத்து வாருங்கள் எனக் கூறினாா்.

Advertisement

Advertisement

மூதாட்டி வீட்டுக்குள் சென்று தண்ணீா் எடுத்து வந்தபோது அந்த நபா் மூதாட்டியிடம் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைக் கழட்டி பாத்திரத்தில் போடும் படி கூறினாா். இதை நம்பிய மூதாட்டி தனது தங்கச் சங்கிலியைக் கழட்டி பாத்திரத்தில் போட்டாா்.

சிறிது நேரத்தில் அந்த நபா் மூதாட்டியை தள்ளிவிட்டு சங்கிலியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பினாா். இதுகுறித்து மூதாட்டி பாப்பா கீழத்துவல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.