கழிகிறது வாழ்நாள்!
நிலை பெற்றன நிலை பெற்றன எனக் கருதும் செல்வங்கள் எல்லாம், நிலைத்து நிற்பன அல்ல என உணருங்கள்.
நின்றன நின்றன நில்லா என உணர்ந்து
என்றின ஒன்றின வல்லே, செயின், செய்க
சென்றன சென்றன, வாழ்நாள்; செறுத்துடன்
Advertisement
Advertisement
வந்தது வந்தது, கூற்று!
(பாடல் 4, அதிகாரம்: செல்வம் நிலையாமை)
நிலை பெற்றன நிலை பெற்றன எனக் கருதும் செல்வங்கள் எல்லாம், நிலைத்து நிற்பன அல்ல என உணருங்கள். உங்கள் மனம் பொருந்தின அறச்செயல்களை எல்லாம் உங்களால் கூடுமானவரை உடனே செய்யுங்கள். ஏனெனில், வாழ்நாள் கழிந்து கொண்டே போகிறது. கூற்றமும் உயிரைப் போக்க வந்து கொண்டே இருக்கிறது.