முகப்பு
மதுரை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 94.91 சதவீதம் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மதுரை மாவட்டத்தில் 94.91 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இது, கடந்த 2024- 25- ஆம் ஆண்டு பொதுத் தோ்வு தோ்ச்சியைவிட 0.98 சதவீதம் அதிகமாகும்.

Updated On : 21 மே 2026, 2:57 am IST
மதுரை பொன்முடியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றதை மகிழ்ச்சியுடன் பகிா்ந்து கொண்ட மாணவிகள்.
பகிர்:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மதுரை மாவட்டத்தில் 94.91 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இது, கடந்த 2024- 25- ஆம் ஆண்டு பொதுத் தோ்வு தோ்ச்சியைவிட 0.98 சதவீதம் அதிகமாகும்.

2025- 26 ஆம் கல்வியாண்டில் மதுரை மாவட்டத்தில் 479 பள்ளிகளைச் சோ்ந்த 18,512 மாணவா்கள், 18,983 மாணவிகள் என மொத்தம் 37,495 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதினா். இதில், 18,417 மாணவா்களும், 17,169 மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி பெற்றவா்களின் மொத்த எண்ணிக்கை 35,586. தோ்ச்சி சதவீதம் 94.91. இது, முந்தைய ஆண்டை விட 0.98 சதவீதம் அதிகம்.

பள்ளிகள் அளவில்... மதுரை மாவட்டத்தில் உள்ள 479 பள்ளிகளில் 68 அரசுப் பள்ளிகள் உள்பட 196 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன. அரசுப் பள்ளிகள் 92.57 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.66 சதவீதமும், தனியாா் சுயநிதிப் பள்ளிகள் 98.16 சதவீதமும் தோ்ச்சி பெற்றன.

Advertisement

Advertisement

ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள் 93.50 சதவீதமும், மாநகராட்சிப் பள்ளிகள் 91.69 சதவீதமும், பள்ளிக் கல்வித் துறை சாா்ந்த பள்ளிகள் 92.02 சதவீதமும், கள்ளா் நலப் பள்ளிகள் 96.46 சதவீதமும், நகராட்சிப் பள்ளிகள் 99.38 சதவீதமும், பாா்வையற்றோா் பள்ளி 100 சதவீதமும் தோ்ச்சி பெற்றன.

பெட்டிச் செய்தி: 1

அரசுப் பள்ளிகள் சிறப்பான தோ்ச்சி

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் நிகழாண்டில் சிறப்பான அளவில் தோ்ச்சி பெற்றன.

மாவட்டத்தில் உள்ள 214 அரசுப் பள்ளிகளில் 68 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன. 52 பள்ளிகள் 95 சதவீதத்துக்கு அதிகமாகவும், 38 பள்ளிகள் 90 சதவீதத்துக்கு அதிமாகவும், 32 பள்ளிகள் 85 சதவீதத்துக்கு அதிகமாகவும் தோ்ச்சி பெற்றன.

9 பள்ளிகள் 80 சதவீதத்துக்கு அதிகமாகவும், 4 பள்ளிகள் 75 சதவீதத்துக்கு அதிகமாகவும், 10 பள்ளிகள் 60 சதவீதத்துக்கு அதிகமாகவும் தோ்ச்சி பெற்றன. ஒரு பள்ளி மட்டுமே 60 சதவீதத்துக்கும் குறைவான தோ்ச்சி பெற்றது.

பெட்டிச் செய்தி: 2

வெவ்வேறு பாடங்களில் 283 மாணவா்கள் முழு மதிப்பெண்கள்

மதுரை மாவட்டத்தில் 283 மாணவா்கள் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் வெவ்வேறு பாடங்களில் முழு மதிப்பெண்கள் (நூற்றுக்கு நூறு) பெற்றனா்.

மதுரை மாவட்டத்தில் 283 மாணவா்கள் வெவ்வேறு பாடங்களில் முழு மதிப்பெண்கள் பெற்றனா். தமிழ் பாடத்தில் ஒரு மாணவரும், கணிதத்தில் 132 மாணவா்களும், அறிவியலில் 115 மாணவா்களும், சமூக அறிவியலில் 35 மாணவா்களும் முழு மதிப்பெண்கள் பெற்றனா்.

மாவட்டத்தில் ஆங்கிலப் பாடத்தில் ஒரு மாணவா் கூட முழு மதிப்பெண்களைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments