மனஉறுதி கொண்டவர்கள்
வைத்த காலைப் பெயர்த்து எடுத்துவைக்கவும் முடியாதபடி பெரிய அவமதிப்பு இடைவிடாது நெருங்கி வந்த போதிலும், அதற்கும் உள்ளங் கலங்காது, தாம் மேற்கொண்ட செயலை நிறைவேற்றும்படியான மனவுறுதி கொண்டவர்கள், சிறந்தவர்கள்.
தண்டாச் சிறப்பிற்றம் இன்னுயிரைத் தாங்காது,
கண்டுழி எல்லாம் துறப்பவோ,-மண்டி,
அடிபெயராது, ஆற்ற இளிவந்த போழ்தின்
Advertisement
Advertisement
முடிகிற்கும் உள்ளத் தவர்?
(பாடல் 62 அதிகாரம்: சினம் இன்மை)
வைத்த காலைப் பெயர்த்து எடுத்துவைக்கவும் முடியாதபடி பெரிய அவமதிப்பு இடைவிடாது நெருங்கி வந்த போதிலும், அதற்கும் உள்ளங் கலங்காது, தாம் மேற்கொண்ட செயலை நிறைவேற்றும்படியான மனவுறுதி கொண்டவர்கள், சிறந்தவர்கள். அவர்கள் நீங்காத சிறப்பினையுடைய தமது இனிதான உயிரைப் பேணித் தாங்குவதற்கு நினையாமல், கண்டவற்றில் எல்லாம் செல்லவிட்டு, அதனை விட்டுவிட என்றாவது நினைப்பார்களோ?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.