வெள்ளிமணி

பலன் தரும் பரிகாரத் தலங்கள்

சென்னை காளிகாம்பாள் கோயில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி வந்து அம்மன் அருள் பெற்று சென்றதாக வரலாறு உள்ளது.

ஆர்.விஜயலட்சுமி

சென்னை காளிகாம்பாள் கோயில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி வந்து அம்மன் அருள் பெற்று சென்றதாக வரலாறு உள்ளது. நியாயமான வழக்குகளில் வெற்றியடைய இந்த கோயிலுக்கு வந்து சிறப்புப் பூஜைகள் செய்து பலனடைகிறார்கள். சென்னை பாரிமுனை தம்புச்செட்டி தெருவில் இக்கோயில் 
அமைந்துள்ளது.

தஞ்சை பெரிய கோயிலில் வராகி அம்மன் சந்நிதி உள்ளது. இந்த அம்மனை வழிபட்டால் நியாயமாக வந்து சேர வேண்டிய பணம் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவனையும் பெருமாளையும் ஒரே இடத்தில் நின்று மூலவரை வழிபட முடியும். இடது கண்ணால் பெருமாளையும் வலது கண்ணால் சிவனையும் வழிபடும் வகையில் சந்நிதிகள் அமைக்கப்பட்டிருப்பது அபூர்வம்.

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோயிலில் கமலாம்பிகை சந்நிதி உள்ளது. இந்த அம்மனை வழிபட்டால் கடன் தொல்லைகள், நோய் நொடிகள் நீங்கும் என்பது ஐதீகம்.

தர்மபுரி அருகே உள்ள மல்லிகார்ஜுனேஸ்வரர் காமாட்சி அம்மன், பைரவர் சந்நிதிகள் உள்ளன. கடன் பிரச்னை உள்ளவர்கள் இங்குள்ள பைரவர் சந்நிதியில் அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்ட புதிய மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு! நாளை அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்!

ஃபிலிம்ஃபேர் ஓடிடி விருதுகள் 2025 - புகைப்படங்கள்

திருப்பரங்குன்றம் குறித்து விஜய் பேசாதது ஏன்? அண்ணாமலை

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

SCROLL FOR NEXT