பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்
ஆஸ்திரேலியா அருகில் உள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் திங்கள்கிழமை நிலநடுக்கம்
ஆஸ்திரேலியா அருகில் உள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
நியூ பிரிட்டன் மாகாணத்தின் ஃபின்ஸ்சாபெனின் நகரத்தில் இருந்து 44 கி.மீ. தொலைவிலும், பூமிக்கு அடியில் 84 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் வீச்சு ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் எதுவுமில்லை என்று, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கடற்கரையில் இருந்து வெகு தொலைவிலும், பூமிக்கு அடியில் அதிக ஆழத்திலும் நிலநடுக்கம் உருவானதால், கட்டடங்களுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. உயிரிழப்புகளும் நிகழவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.