முகப்பு
உலகம்

அமெரிக்க விமான விபத்து: 7 பேர் சாவு

அமெரிக்காவில் சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

Updated On : 2 மே 2013, 1:38 am IST
பகிர்:

அமெரிக்காவில் சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த சரக்கு விமானம் ஒன்று ஆப்கானிஸ்தான் மற்றும் துபை உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு வாகனங்களை திங்கள்கிழமை ஏற்றிச் சென்றுள்ளது. ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற அந்த விமானம் அங்குள்ள பாக்ரம் விமான ஓடு தளத்திலிருந்து மேலே எழும்பியபோது திடீரென விபத்துக்குள்ளானது.

இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிங்கு சுமன் (32) உள்பட விமானத்தில் பயணம் செய்த ஏழு பேரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக அமெரிக்க விமானப்போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.