முகப்பு
உலகம்

சீனாவின் "இரும்புச் சகோதரன்' பாகிஸ்தானுக்கு லீ கெகியாங் புகழாரம்

சீனாவின் "இரும்புச் சகோதரன்' என்று பாகிஸ்தானை வர்ணித்துள்ளார் அந்நாட்டு அதிபர் லீ கெகியாங்.

Updated On : 22 மே 2013, 2:32 am IST
பகிர்:

சீனாவின் "இரும்புச் சகோதரன்' என்று பாகிஸ்தானை வர்ணித்துள்ளார் அந்நாட்டு அதிபர் லீ கெகியாங்.

சீனப் பிரதமர் லீ கெகியாங் தனது மூன்று நாள் இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு, பாகிஸ்தானுக்கு புதன்கிழமை பயணம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் லீ கெகியாங் கூறியுள்ளதாக பாகிஸ்தானின் அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்காசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மை, பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய நடவடிக்கைகளில் பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றி வருகிறது. இதனை சீனா பாராட்டுகிறது.

Advertisement

Advertisement

சர்வதேச சமூகமும் பாகிஸ்தானை ஆதரித்து, அதற்கு உரிய ஆதரவை வழங்க வேண்டும். பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒற்றுமை, பொருளாதார வளர்ச்சி ஆகியவை மேம்பட சீனா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.  பாகிஸ்தானுடன் பல ஆண்டுகாலமாக உள்ள நட்புறவு தொடரும். சீனாவின் மிகுந்த நம்பிக்கைக்கு உரிய நாடு பாகிஸ்தான் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருநாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் லீ கெகியாங், அந்நாட்டு அதிபர் ஜர்தாரி, அடுத்து பிரதமராக உள்ள நவாஸ் ஷெரீப் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.

இது தவிர ராணுவ தலைவர்கள், அரசியல் தலைவர்கள் பலரையும் லீ கெகியாங் சந்திக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.