முகப்பு
உலகம்

அரசுப் படை தாக்குதல்: பயங்கரவாதிகள் 7 பேர் சாவு

யேமனில் அரசுப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் அல் காய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 2 ஜூன் 2013, 12:33 am IST
பகிர்:

யேமனில் அரசுப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் அல் காய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

யேமனில் அபியான் மாகாணத்தில் உள்ள மக்ஃபாதில் அல் காய்தா பயங்கரவாதிகள் முகாம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் யேமன் அரசுப் படையினர் சனிக்கிழமை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். இந்த 8 பேரும் மக்ஃபாத் பகுதியில் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மக்ஃபாத் பகுதியை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்த அல் காய்தாவினரை விரட்டியடிக்க 2012 மே மாதத்திலிருந்து யேமன் அரசு தாக்குதலை நடத்தி வருகிறது. யேமனின் இந்நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது.

அப்பிராந்தியத்தில் அல் காய்தா பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகத் தெரிந்தால், அவர்கள் மீது ஆளில்லா விமானத்

தாக்குதலை அமெரிக்கா நிகழ்த்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments