உலகம்

ஜப்பானில் நிலநடுக்கம்

DIN

ஜப்பானில் சனிக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
ஜப்பானின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியை மையம் கொண்டு சனிக்கிழமை காலை 5 மணிக்கு (உள்ளூர் நேரம்) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. டோக்கியோவுக்கு வடகிழக்கே 244 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் 11 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 அலகுகளாகப் பதிவானது என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது பொருள் சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
ஜப்பானின் டைகோ நகரில் கடந்த புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.3 அலகுகளாகப் பதிவானது. அதன் தொடர்ச்சியாக இரண்டு நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமையும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு புவித் தகடுகள் ஒன்று சேரும் இடத்தில் ஜப்பான் அமைந்துள்ளது. இதனால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இருப்பினும், நில அதிர்வைத் தாங்கும் வகையில் கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் சிறிய அளவிலேயே சேதம் ஏற்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT