உலகம்

ஈராக்கில் ஒரே வாரத்தில் 232 பேரைக் கொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்!

DIN

பாக்தாத்: ஈராக்கில் அரசுக்கு எதிராக போராடி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், மொசூல் நகர் அருகே ஒரே வாரத்தில் 232 பேரை  கொலை செய்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஈராக்கின் மொசூல் நகரத்தை ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்க அரசு படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் மொசூலுக்கு அருகே மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் கடந்த வாரம் அப்பாவி மக்கள் 232 பேரை பிடித்து சென்று ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்துள்ள  விபரம் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலக செய்தி தொடர்பாளர் ரவிணா ஷாம்தசானி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அவர்களில் 190 பேர் ஈராக் முன்னாள் படை அதிகாரிகள் ஆவார்கள். இந்த தகவலை  தெரிவித்தார்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் பற்றிய இறுதி எண்ணிக்கை இன்னும் அதிகமாகக்கூட இருக்கலாம். அதை உறுதிபடுத்த முடியவில்லை. மொசூல் நகரைப் தக்கவைத்து கொள்ள மக்களை மனித கேடயங்களாக ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர். மொசூல் நகரை சுற்றிஉள்ள மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம் மக்கள்  கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளனர்

இப்பகுதியில் உள்ள மக்களை வெளியேறுமாறு ராணுவம் உத்தரவிட்டு உள்ளது, அதே சமயம் இதன்படி வெளியேறுபவர்களை ஐ .எஸ். தீவிரவாதிகள் கொன்று வருகிறார்கள்

இவ்வாறு ஷாம்தசானி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT