உலகம்

துபாய் டார்ச் டவரில் பயங்கர தீ விபத்து

தினமணி

துபாய் டார்ச் டவரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

உலகின் உயர்ந்த கட்டடங்களில் ஒன்று துபாய் டார்ச் டவர். சுமார் 1,105 அடி உயரம் கொண்ட இந்த கட்டடத்தின் 9ஆவது தளத்தில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென எரிந்த தீ மற்ற தளங்களுக்கும் பரவியது.

தகவலறிந்து அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்தவர்களை உடடினயாக வெளியேற்றினர். பின்னர் சுமார் 2 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து உடனடியாக தெரிவரவில்லை. 79 தளங்கள் கொண்ட டார்ச் டவர் கடந்த 2011-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. ஏற்கெனவே, இக்கட்டடத்தில் 2015-ஆம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT