உலகம்

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 115-ஆக அதிகரிப்பு

DIN

நேபாளத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் என்ணிக்கை 115-ஆக அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ராம் கிருஷ்ண சுபேதி தெரிவித்துள்ளதாவது:
நேபாளத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 115-ஆக அதிகரித்தது. மேலும், காணாமல் போன 40 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாள்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தாற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மழை வெள்ளத்தால், 60 லட்சம் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 2,847 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. சேத விவரங்களை கணக்கிட உள்துறை அமைச்சர் ஜனார்தன் சர்மா தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில், தலைமைச் செயலர் மற்றும் 12 அமைச்சர்கள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
மீட்பு நடவடிக்கைகளில் 26,700-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 13 ஹெலிகாப்டர்கள், மோட்டார் மற்றும் ரப்பர் படகுகளைக் கொண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது என்றார் அவர்.
நேபாளத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் 27 மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT