உலகம்

மேற்கு ஆப்பிரிக்கா: நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 300 பேர் பலி

DIN

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சியாரா லியோன் நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
600 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவில் சிக்கி பலர் புதையுண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சியாரோ லியான் நாட்டில் கடுமையான மழை பெய்ததால் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மண்ணில் புதையுண்டன. இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 600 பேரைக் காணவில்லை என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவில் அவர்கள் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். நிலைமையை சீராக்க அந்நாட்டு அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் 3 இடங்களில் நீா்மோா் பந்தல்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஊரக நலப்பணிகள் இயக்குநா் ஆய்வு

பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலம்மாள் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பெண்களை கேலி செய்த இளைஞா்களை தட்டிக்கேட்ட நடத்துநா் மீது தாக்குதல்

கேட்பாரற்று கிடந்த 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT