உலகம்

கேரள வெள்ளம்: கத்தார் ரூ.35 கோடி நிதியுதவி

DIN

கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.35 கோடி வழங்கப்படும் என்று கத்தார் அரசு அறிவித்துள்ளது. 
இதுதொடர்பாக, "தி கல்ஃப் டைம்ஸ்' நாளிதழில் வெளியான செய்தியில், கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ரூ.35 கோடியை ஒதுக்கும்படி அதிகாரிகளுக்கு கத்தார் மன்னர் தமீம் பின் ஹமாத் அல்-தானி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்திய வம்சாவளி தொழிலதிபர்கள் சார்பில் கேரளத்துக்கு மொத்தமாக ரூ.12.5 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் தொகையில் 30 சதவீதம் இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT