இந்தோனேஷிய சுனாமி: பலி 429-ஆக உயர்வு
இந்தோனேஷியாவில் சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 429-ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேஷியாவில் சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 429-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ரோஹோ செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
எரிமலை சீற்றத்தின் காரணமாக ஏற்பட்ட சுனாமிப் பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 429-ஆக அதிகரித்துள்ளது. மேலும், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு படுகாயமடைந்த 1,400 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுனாமியில் சிக்கி காணாமல் போனதாக கருதப்படும் 128 பேரை தேடும் பணி தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மேற்கு ஜாவா மற்றும் தெற்கு சுமத்ரா கடற்கரைப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சுனாமியால் மிகவும் சேதமடைந்துள்ளன. இதனால், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிற்கதியாக வெட்டவெளியில் தவித்து வருகின்றனர் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.