உலகம்

இந்திய - அமெரிக்கருக்கான மரண தண்டனை நிறுத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்பு

DIN

பாட்டி மற்றும் பேத்தியைப் படுகொலை செய்த வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரகுநந்தன் யண்டமுரிக்கு (32) வரும் பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி நிறைவேற்றப்படுவதாக உள்ள மரண தண்டனையை நிறுத்திவைக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பென்சில்வேனியா சிறைத் துறை செய்தித் தொடர்பாளர் மெக்நாட்டன் கூறியதாவது:
சிறைக் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்காவிட்டால், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இடைக்காலத் தடை விதிக்கப் போவதாக மாகாண ஆளுநர் டாம் வால்ஃப் தெரிவித்துள்ளார்.
எனவே, அடுத்த மாதம் 23-ஆம் தேதி ரகுநந்தன் யண்டமுரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே ஆகும் என்றார் அவர்.
பென்சில்வேனியா மாகாணத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யவதி (61) மற்றும் அவரது 10 மாதப் பேத்தி சான்வி ஆகியோரை படுகொலை செய்ததாக ரகுநந்தனுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பணத்துக்காக அந்தக் குழந்தையைக் கடத்த முயன்றபோது, அந்தத் திட்டம் தோல்வியடைந்ததால் இருவரையும் ரகுநந்தன் படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்ட அவருக்கு, அடுத்த மாதம் 23-ஆம் தேதி விஷ ஊசி மூலம் மரண தண்டனையை நிறைவேற்ற தேதி குறிக்கப்பட்டது.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றத் தேதி குறிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT