உலகம்

ஜப்பான் வெள்ளம்: பலி எண்ணிக்கை 200

DIN

ஜப்பானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டியுள்ளது.
அண்மைக் கால ஜப்பானிய வரலாற்றில், வானிலை பேரிடர் காரணமாக ஏற்பட்ட மிகப் பெரிய உயிரிழப்பு இது என்று கூறப்படுகிறது.
அந்த நாட்டில் கடந்த வாரம் தொடங்கிய வரலாறு காணாத மழை தற்போது நின்றுள்ள நிலையில், காணாமல் போயுள்ள பலரைத் தேடும் பணியை மீட்புக் குழுவினர் வீடு வீடாக சென்று மேற்கொண்டு வருகின்றனர். எனினும், மாயமானவர்களில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மிகவும் முக்கியமான 72 மணி நேரம் கடந்து விட்டது. எனினும், இன்னும் காணாமல் போயுள்ள சுமார் 60 பேரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்' என்று தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சகல துறைகளிலும் உச்சத்தில் இருந்தவா் கருணாநிதி: கமல்ஹாசன்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா

மாணவிக்கு கல்வி நிதியுதவி அளிப்பு

முட்டை விலையில் மாற்றமில்லை

347 வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு

SCROLL FOR NEXT