உலகம்

அமெரிக்கா: பயிற்சி விமானங்கள் மோதி இந்திய இளம்பெண் உள்பட 3 பேர் பலி

DIN

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடுவானில் 2 பயிற்சி விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்திய இளம்பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து மியாமி ஹெரால்ட் இணையதளத்தில் வெளியான செய்தி:
மியாமி நகரில் உள்ள விமானி பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான 2 சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 3 பேர் உயிரிழந்தனர். விபத்து நேரிட்ட பகுதிக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் விமானங்கள் மோதிக்கொள்வதை செல்லிடப்பேசியில் விடியோவாக பதிவு செய்தார். அவர் அளித்த தகவலின்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இறந்தவர்களின் அடையாளம் தெரியவந்தது. இந்தியாவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் நிஷா செஜ்வால், ஜார்ஜ் சன்செஸ் (22), ரல்ப் நைட் (72) ஆகியோர் உயிரிழந்தனர்.
இரண்டு விமானங்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
விமானங்களில் மேலும் ஒருவர் சென்றிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். விபத்து நேரிட்ட பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று மியாமி ஹெரால்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியாமி நகரில் உள்ள டீன் இன்டர்நேஷனல் விமானி பயிற்சி நிறுவனத்தில் கடந்த 2007-இல் இருந்து 2017-ஆம் ஆண்டு வரை இதுபோன்ற பல விபத்துகள் நேர்ந்திருப்பதாக மியாமி மேயர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT