உலகம்

மெக்ஸிகோ கேளிக்கை விடுதி தீவிபத்து: பலி எண்ணிக்கை 26ஆக உயர்வு | Mexico Bar attack 

DIN

மெக்ஸிகோவில், கேளிக்கை விடுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.

மெக்ஸிகோவின் கோட்ஸாகோல்கோஸ் நகரில் அமைந்துள்ள கேளிக்கை விடுதிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த மர்ம நபர்கள், அங்கு பெட்ரோலை ஊற்றி தீவைத்தனர். இதில், அந்த விடுதியில் இருந்த 25 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

தீவைப்பில் ஈடுபட்ட நபர்கள் கேளிக்கை விடுதியில் வாயிலில் தடுப்புகளை ஏற்படுத்தி, உள்ளே இருந்தவர்கள் தப்பியோடுவதைத் தடுத்ததாகவும், சம்பவத்தின்போது விடுதிக்குள் பலத்த இசை ஒலித்துக் கொண்டிருந்ததால் தீ கொழுந்துவிட்டு எரிந்த பிறகுதான் பலருக்கு அதுபற்றி தெரிய வந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 

போதை மருந்து கடத்தல் கும்பல்களுக்கிடையே நடைபெற்று வரும் போட்டியில் பல குற்றச் சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், அந்தக் கும்பல்களுக்கு எதிராக காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதற்குப் பழிவாங்கும் வகையில் இந்த தீவைப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

தற்போது இந்த தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-க்கு ஒத்திவைப்பு!

கோபா அமெரிக்காவின் தீம் பாடல்!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

எங்கே செல்கிறார் சோபிதா?

SCROLL FOR NEXT