உலகம்

யேமனில் சவூதி வான்வழித் தாக்குதல்

DIN

யேமனில் கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து சவூதி கூட்டுப் படைகள் சனிக்கிழமை வான்வழித் தாக்குதல்களை நடத்தின. யேமன் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில் முதல் முறையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
யேமனில் உள்ள கிளர்ச்சிப் படை மையங்கள் மற்றும் அவர்களது ஆளில்லா விமானங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை  குறிவைத்து தலைநகர் சனாவில் சனிக்கிழமை இந்த வான்வழித்  தாக்குதல் நடத்தப்பட்டது. 
 யேமனின் ஹுதைதா நகரில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ள நிலையிலும் சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் இந்த வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன. 
இந்த தாக்குதலில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் குறித்து உடனடியாகத் தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT