உலகம்

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி: ஹைதி பிரதமர் ராஜிநாமா

DIN

கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியில், பிரதமர் ஜான் ஹென்றி சியன்ட்டுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. அதையடுத்து அவர் தனது பிரதமர் பதவியை ராஜிநாமாசெய்தார்.
வட அமெரிக்க கண்டத்தில் உள்ள கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. அந்நாட்டின் பிரதமராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜான் ஹென்றி சியன்ட் பதவியேற்றார். சியன்ட் பதவியேற்ற பின்பும், நாட்டில் பணவீக்கம், வேலையின்மை பிரச்னைகள் குறையவில்லை. நாட்டிலும் அவருக்கு எதிராக அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அதனால் சியன்ட்டுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 93 பேரும், எதிராக 6 பேரும் வாக்களித்தனர். நாடாளுமன்றத்தில் சியன்ட்டுக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. 
 எனினும், புதிய அரசு அமையும் வரை, ஜான் ஹென்றி சியன்ட்டும், அவரது அமைச்சர்களும் தங்கள் பொறுப்புகளில் சில கட்டுப்பாடுகளுடன் தொடர்வார்கள் என்று நாடாளுமன்ற தலைவர் அறிவித்தார். 
முன்னதாக, அந்நாட்டின் பிரதமராக இருந்த ஜாக் கய் லபோனன்ட், வெனிசூலாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறுவதற்கான மானியத் தொகையை விலக்கிக் கொண்டதால், நாட்டில் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்தன. அதனால் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் எழுந்த நிலையில், ஜாக் பதவி விலகினார். அதையடுத்து, ஜான் ஹென்றி சியன்ட் பிரதமர் பதவியேற்றார். இந்நிலையில், அவரும் பதவியிலிருந்து தூக்கியெறிப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT