உலகம்

சீனாவின் செவ்வாய்க் கிரக ஆய்வு: முதல் பரிசோதனை இன்று நிறைவு!

DIN

செவ்வாய்க் கிரக ஆய்வுக்கான சீனாவின் பரிசோதனை முயற்சி முதன்முறையாக நவம்பர் 14ஆம் நாள் மேற்கொள்ளப்பட்டது.

ஹேபெய் மாநிலத்திலுள்ள ஒரு தளத்தில் தரையிறங்கி விண்வெளியில் நிறுத்துவது, தடைகளில் இருந்து தப்பிப்பது உள்ளிட்டவை குறித்து பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இத்தளம், புவிக்கு அப்பாலுள்ள வான் பொருட்களில் தரையிறங்கும் சோதனைக்கான ஆசியாவின் மிகப் பெரிய பரிசோதனைத் தளமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க் கிரக ஆய்வுக்கான சீனாவின் முதலாவது திட்டம் 2020ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும். செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றிப் பார்ப்பது, செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்குவது, செவ்வாய்க் கிரகத்தின் மீது உலகப் பன்நோக்கப் பரிசோதனையை நடத்துவது முதலியவை, இத்திட்டத்தின் நோக்கத்தில் இடம்பெறுகின்றன.

பிரான்ஸ், இத்தாலி, பிரேசில் உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த சீனாவுக்கான தூதர்கள், சீனாவுக்கான ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தூதாண்மை குழுவினர்கள், ஆசியா - பசிபிக் விண்வெளி ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகள், சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் உள்ளிட்ட 70 பேர் இப்பரிசோதனையைப் பார்த்தனர். சர்வதேச விண்வெளிப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளைச் சீனா பயன் தரும் முறையில் மேற்கொள்ளும் ஒரு முக்கிய நடவடிக்கை இதுவாகும்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT