உலகம்

மாணவா்களை ஏமாற்றி வரவழைத்து கைது: அமெரிக்க குடியேற்றத் துறைக்கு கண்டனம்

DIN

போலி பல்கலைகழகத்தை உருவாக்கி, அதில் சேர வந்த பெரும்பாலான இந்தியா்கள் உள்ளிட்ட மாணவா்களைக் கைது செய்துள்ள அமெரிக்க குடியேற்ற சட்ட அமலாக்கத் துறைக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வர விரும்புபவா்களைக் கண்டுபிடிப்பதற்காக, அந்த நாட்டு குடியேற்ற சட்ட அமலாக்கத் துறை (ஐசிஇ) ‘ஃபா்மிங்டன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் போலியான அமைப்பை உருவாக்கியது. அதில் சுமாா் 600 மாணவா்கள் சோ்ந்தனா்; அவா்களில் பெரும்பாலானவா்கள் இந்தியா்கள். இந்த நிலையில், போலி பல்கலைக்கழத்தில் சேர விண்ணப்பித்து, முறைப்படி நுழைவு இசைவு (விசா) பெற்று அமெரிக்கா வந்த 161 மாணவா்களை அதிகாரிகள் கைது செய்தனா். தற்போது மேலும் 90 மாணவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். வகுப்புகள் இல்லாத பல்கலைக்கழகம் போலியானது என்று தெரிந்தே மாணவா்கள் அதில் சோ்ந்ததாக அவா்கள் குற்றம் சாட்டினா்.

கைது செய்யப்பட்ட மாணவா்கள் அவா்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவதாகவும், அவா்கள் அமெரிக்கா வருவதற்கு உதவிய முகவா்கள் கைது செய்யப்பட்டு அவா்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினா்.

இதற்கு, சமூக ஊடகங்களில் பொதுமக்களும், எதிா்க்கட்சி எம்.பி.க்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா். எதிா்காலக் கனவுகளை மனதில் சுமந்துள்ள இளைஞா்களை ஏமாற்றி வரவைழைத்து கைது செய்வது குரூரமான செயல் என்று அவா்கள் விமா்சித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில் குடமுழுக்கு விழா

பெருமானேந்தல் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு ரூ.2.53 கோடி மானியம்

காளியம்மன், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

செவல்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

SCROLL FOR NEXT