முகப்பு
உலகம்

ஆயுதச் சட்டத்தை மேலும் கடுமையாக்கியது நியூஸிலாந்து

நியூஸிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் எதிரொலியாக, பொதுமக்கள் ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்கும் சட்டத்தை அந்த நாட்டு அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதா

Updated On : 14 செப்டம்பர் 2019, 1:06 am IST
பகிர்:


நியூஸிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் எதிரொலியாக, பொதுமக்கள் ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்கும் சட்டத்தை அந்த நாட்டு அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட கிறைஸ்ட்சர்ச் மசூதித் தாக்குதலுக்குப் பிறகு, பொதுமக்கள் தானியங்கித் துப்பாக்கிகளை வைத்திருப்பதைத் தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொதுமக்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் துப்பாக்கிகளை திரும்ப விலைக்கு வாங்கிக் கொள்ளும் திட்டமும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தகுதியுடைய நபர்கள் மட்டுமே துப்பாக்கிகள் வைத்திருக்க அனுமதிக்கும் புதிய சட்டத்தை நியூஸிலாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, போலீஸார் அனுமதி அளிக்கும் நபர்களுக்கு மட்டுமே துப்பாக்கிகளை விற்பனை செய்ய முடியும்.
அதுமட்டுமன்றி, துப்பாக்கி வைத்திருப்பவர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேட்டை தொடர்ந்து பராமரித்து வரவும் புதியச் சட்டம் இடமளிக்கும்.
கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு மசூதிகளில் பிரென்டன் டாரன்ட் என்ற வெள்ளை இனவாதி நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் உயிரிழந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments