உலகம்

பின்லேடன் மகன் கொல்லப்பட்டார்: உறுதி செய்தார் டிரம்ப்

DIN

அமெரிக்கா நடத்திய தாக்குதல் நடவடிக்கையில் அல்-காய்தா தலைவர் பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டதை அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் உயர்நிலைத் தலைவர்களில் ஒருவரும், பின்லேடனின் மகனுமான ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டார். ஆப்கன் - பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டதாக கடந்த மாதமே ஊடகங்கள் தெரிவித்த நிலையில், அந்தத்தகவலை தற்போது அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT