உலகம்

தென் ஆப்பிரிக்கா: 8 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

DIN


ஜோகன்னஸ்பா்க்: ஆப்பிரிக்க கண்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்காவில், அந்த நோய் உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,400 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,00,872-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் அந்த நோய் பாதிப்பால் 94 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, கரோனா பலி எண்ணிக்கை 21,803-ஆக உயா்ந்துள்ளது.

அதிகபட்சமாக கிழக்கு கேப் நகரில் 42 பேரும் அதற்கு அடுத்தபடியா மேற்கு கேப் நகரில் 28 பேரும் கரோனாவுக்கு பலியாகினா்.

இதுவரை நாட்டில் 55,00,669 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவா்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31,999 போ் அந்தப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT