உலகம்

பரவும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: சீனா

DIN

சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக  சீனத் தேசிய உடல்நல ஆணையத்தின் உயர்நிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

ஜனவரி 20ஆம் நாள் மாலை 6 மணி வரை சீனாவில் 224 பேருக்கு புதிய ரக கொரோனா வைரஸ் தொற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 217 பேர் நோயாளிகளாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து சீனத் தேசிய உடல்நல ஆணையத்தின் உயர்நிலை நிபுணர்கள் குழு அதேநாள் பெய்ஜிங்கில் கூறுகையில், இந்த வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நம்பிக்கை கொள்வதாகவும், 17 ஆண்டுகளுக்கு முன் சார்ஸ் வைரஸ் பெருமளவில் பரவியது போன்ற நிலைமை தற்போது ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த புதிய ரக வைரஸைப் பிரித்து மரபணு வரிசையை உறுதிப்படுத்தும் பணியை இந்த நிபுணர்கள் குழு ஏற்கனவே நிறைவேற்றியுள்ளது. மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

17 ஆண்டுகளுக்கு முன்பை விட, கொள்ளை நோய் உள்ளிட்ட துறைகளில் சீனா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. முழுமையான மருத்துவச் சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு அமைப்பு முறையும் நிறுவப்பட்டுள்ளது. நோய் தடுப்புக்கு பொது மக்கள் முக்கியத்துவம் அளிக்கும் அதேவேளை பீதி அடைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT