உலகம்

பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 19 பேர் பலி

DIN


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பேருந்து மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் பேருந்தில் வந்த 19 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

ஷேய்குபுரா மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில், சீக்கிய பக்தர்கள் வந்து கொண்டிருந்த பேருந்து மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 19 சீக்கிய பக்தர்கள் மரணம் அடைந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நங்கனா சாஹேப் சென்றிருந்த சீக்கிய பக்தர்கள், வழிபாடுகளை முடித்துக் கொண்டு பேருந்தில் குருத்வாரா சச்சா சௌதாவுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். அந்த பேருந்தில் 25 பேர் இருந்துள்ளதாகவும், சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆளில்லாத ரயில்வே கிராசிங்கில், பேருந்து தண்டவாளத்தைக் கடக்கும் போது, அவ்வழியாக வந்த ஷாஹ் ஹுசைன் விரைவு ரயில் பேருந்து மீது மோதியதில், பேருந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

SCROLL FOR NEXT