உலகம்

பாகிஸ்தானில் புதிதாக 2,980 பேருக்கு தொற்று; மேலும் 83 பேர் உயிரிழப்பு

DIN

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,980 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. 

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானோர் குறித்த விவரங்களை அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி,  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,980 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,37,489 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 4,922 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று இதுவரை 1,40,965 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில்  2,236 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

மொத்த பாதிப்பில் சிந்து - 97,626, பஞ்சாப் - 83,559, கைபர்-பக்துன்க்வா- 28,681, இஸ்லாமாபாத் - 13,650, பலுசிஸ்தான்- 10,919, கில்கித்-பல்திஸ்தான்- 1,595 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 1,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 21,951 மாதிரிகள் உள்பட இதுவரை 14,67,104 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT