உலகம்

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,060 பேருக்கு தொற்று

DIN

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,060 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கில் இங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு குறித்த தகவல்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 59,060 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 30,51,427 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 894 பேர் உள்பட மொத்த உயிரிழப்பு 1,32,256 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை 13 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த இரு தினங்களாக பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT