உலகம்

அமெரிக்காவில் புதிதாக 63,967 பேருக்கு தொற்று; மேலும் 1,059 பேர் பலி

DIN

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,967 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. சமீபமாக இங்கு நாள் ஒன்றுக்கு 60,000 என்ற அளவில் பாதிப்பு இருந்து வருகிறது. 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் கரோனா பாதிப்பு விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 63,967 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 39 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி, மொத்தமாக 39,55,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,059 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழப்பு 1,42,942 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை சுமார் 17 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் 9- ஆவது நாளாக இன்று ஒருநாள் பாதிப்பு 60 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT