உலகம்

சீனாவில் கடந்த 3 மாதங்களில் அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு; 101 பேருக்கு தொற்று உறுதி

DIN

சீனாவில் மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று 100க்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 101 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பிறகு கடந்த மூன்று மாதங்களில் இது அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு என அந்நாட்டு தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

புதிதாக பாதித்தோரில் 89 பேர் ஸின்ஜியாங்க், 8 பேர் லியனிங், ஒருவர் பெய்ஜிங் பகுதியைச் சேர்ந்தவர். மேலும் இன்று தொற்று உறுதியானவர்களில் 27 பேருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. 

சீனாவில் இதுவரை மொத்தம் 84,060 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அறிகுறிகளற்ற 273 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். உயிரிழப்பு 4,664 ஆக பதிவாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT