உலகம்

ஹாங்காங்கில் நாய் பலி: காரணம் கரோனாவா?

DIN


கரோனா வைரஸ் பாதிப்பில்லை என அறிவிக்கப்பட்ட நாய் ஹாங்காங்கில் பலியாகியுள்ளது.

ஹாங்காங்கில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்குச் சொந்தமான 17 வயதுமிக்க வளர்ப்பு நாய்க்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்பதால் பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டைத் தொடர்ந்து கடந்த வாரம் அந்த நாய் வீடு திரும்பியது. இதையடுத்து, கடந்த 16-ஆம் தேதி அந்த நாய் பலியாகியுள்ளது.

இதுதொடர்பாக சௌத் சைனா மார்னிங் போஸ்ட்டில் புதன்கிழமை வெளியானத் தகவலின்படி, வேளாண், மீன்வளம் மற்றும் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தாவது:

நாய் உரிமையாளர் மூலம் அந்த நாய் மார்ச் 16-ஆம் தேதி பலியாகியுள்ளது தெரியவந்தது. பலியானதன் காரணம் குறித்து அறிய உடற்கூறு ஆய்வு செய்ய உரிமையாளர் விரும்பவில்லை.

இதுதொடர்பாக அந்தத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இந்த வளர்ப்பு நாய்க்கு 5 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்திலும் கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்றே முடிவுகள் வந்தன. கடைசி இரண்டு பரிசோதனைகள் மார்ச் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டன. இந்த பரிசோதனையின் முடிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்ட பிறகே, அந்த நாயை வீட்டுக்கு அனுப்ப அனுமதி வழங்கப்பட்டது.

இதுவரை ஒரு பூனை மற்றும் 3 நாய் ஹாங்காங்கில் தனிமைப்படுத்தப்பட்டன. இதில் பலியான நாய் உட்பட அனைத்துக்கும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 வயதுமிக்க அந்த நாயின் உரிமையாளருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு குணமடைந்து மார்ச் 8-ஆம் தேதி அவர் வீடு திரும்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT