உலகம்

ரஷியாவில் தொடர்ந்து 3 ஆவது நாளாக 10 ஆயிரத்துக்கும் குறைவாக பாதிப்பு

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,926 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷியாவில் கடந்த சில வாரங்களாக நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்த நிலையில் இருந்தது. கடந்த 11 ஆம் தேதி 11,656 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதே ஒருநாளில் அதிகபட்ச பாதிப்பாகும். 

இந்நிலையில், கடந்த 3 தினங்களாக ரஷியாவில் பாதிப்பு 10 ஆயிரத்தை விட குறைந்தது. இதில், கடந்த 24 மணி நேரத்தில் 8,926 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 2,90,678 ஆக உயர்ந்துள்ளது.

ரஷியாவில் இதுவரை கரோனாவுக்கு 2,722 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 91 பேர் பலியாகியுள்ளனர். அதே நேரத்தில் 70 ஆயிரம் பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட  நாடுகளில் அமெரிக்காவைத் தொடர்ந்து, ரஷியா 2 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT