உலகம்

பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை

DIN

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது.

இது தொடா்பாக அமெரிக்காவின் உயரதிகாரி ஆலிஸ் ஜி.வெல்ஸ் வாஷிங்டனில் புதன்கிழமை நடைபெற்ற அட்லாண்டிக் கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில், ‘‘ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஹஃபீஸ் சயீது கைது செய்யப்பட்டது, அவரது சொத்துகள் முடக்கப்பட்டது உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டது.

எனினும், இந்த நடவடிக்கைகளில் எந்தவித மாற்றங்களையும் மேற்கொள்ள பாகிஸ்தான் முயலக் கூடாது. பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக ஆப்கானிஸ்தான் போரை ஆதரித்து வரும் அமைப்புகள், பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு சீா்குலைவு ஏற்படுத்தும் அமைப்புகள் ஆகியவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்னையைத் தீா்ப்பதற்கு உதவி செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்க அரசு கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பயங்கரவாதத்தை ஒழிக்க மற்ற நாட்டு அரசுகளுடனும் அரசு சாரா அமைப்புகளுடனும் அமெரிக்கா இணைந்து செயல்பட்டு வருகிறது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT