உலகம்

சிங்கப்பூரில் இன்று 500க்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு

DIN

சிங்கப்பூரில் புதிதாக 533 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: 

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 533 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், மூன்று பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டினர். 

இதையடுத்து, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,876 ஆக அதிகரித்துள்ளது. 

பலியானோரின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது. மேலும் இதுவரை 16,444 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டுத் தொழிலாளர்களை உள்ளடக்கிய பகுதிகளில் வசிப்பவர்கள். அப்பகுதிகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் அறிவிப்பு?”: ரோகிணி திரையரங்க உரிமையாளருடன் நேர்காணல்

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

கற்பித்தலும் கற்றலும்

ஈரான் அதிபர் மறைவு: நாளை துக்கநாள் அனுசரிப்பு

உதகை மலர் கண்காட்சி: மே 26-ஆம் தேதி வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT