முகப்பு
உலகம்

மெக்சிகோவில் ஒரு லட்சத்தைத் தாண்டியது கரோனா பலி

மெக்சிகோவில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

Updated On : 20 நவம்பர், 2020 at 4:13 PM
கோப்புப் படம்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:25 PM

மெக்சிகோவில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

உலகளவில் கரோனா தொற்றால் இதுவரை 5.72 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,97,34,003 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தநிலையில் 13,65,688 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் மெக்சிகோவில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மெக்சிகோவில் 576 பேர் கரோனாவால் பலியாகியுள்ளது. 

இதனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 100,104 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் தொற்றால் 4,472 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,019,543ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹியூகோ லோபஸ் கூறுகையில், தற்போதைய நிலவரப்படி கரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. 

Advertisement

இவ்வளவு விரைவாக பரவிய ஒரு நோயை நாங்கள் ஒருபோதும் சந்தித்ததில்லை என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.