உலகம்

பிரான்ஸில் கரோனா பலி 50 ஆயிரத்தைக் கடந்தது!

DIN

பிரான்ஸில் கரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து பிரான்ஸிலும் கரோனா பாதிப்பு மற்றும் பலி சமீபமாக அதிகரித்து வருகிறது.

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 458 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 50,237 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் புதிதாக 9,155 பேர் உள்பட இதுவரை 21,53,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 1,54,679 பேர் குணமடைந்துள்ளனர். 

பிரான்ஸில் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதியிலிருந்து கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் நவம்பர் 28 ஆம் தேதி வரை அந்த நாட்டில் மூன்று கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT