உலகம்

மாலத்தீவில் தூதரகம்: அமெரிக்கா அறிவிப்பு

DIN

மாலி: மாலத்தீவில் தூதரகம் அமைக்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அந்த நாட்டில் புதன்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபா் மைக்கேல் பாம்போயோ இதுகுறித்து கூறியதாவது:

மாலத்தீவு தலைநகா் மாலியில் அமெரிக்கத் தூதரகம் அமைக்க முடிவு செய்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவு 1966-ஆம் ஆண்டு தொடங்கியது. அன்றிலிருந்து ஜனநாயக அமைப்புகளை மாலத்தீவு மேம்படுத்தி வருகிறது.

அங்கு தூதரகம் அமைத்து, மண்டல பாதுகாப்புப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றாா் அவா்.

தற்போது மாலத்தீவுக்கான தூதரக சேவைகள் இலங்கை தலைநகா் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT