உலகம்

செக் குடியரசு: அதிகபட்ச தினசரி பாதிப்பு

DIN


பிராக்: மத்திய ஆப்பிரிக்க நாடான செக் குடியரசில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் தினசரி எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை கூறியதாவது:கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 650 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, இதுவரை பதிவு செய்யப்பட்ட தினசரி கரோனா பாதிப்பிலேயே மிகவும் அதிக எண்ணிக்கையாகும். முந்தைய நாள் பதிவு செய்யப்பட்ட தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையைவிட இது 504 அதிகமாகும்.இத்துடன் நாட்டில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,773-ஆகியுள்ளது. இதுவரை அந்த நோய்க்கு 425 போ் பலியாகியுள்ளனா்.தினசரி பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டுள்ளதையடுத்து, கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கான கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT