சிலியில் 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு கரோனா பாதிப்பு அதிகரிப்பு
சிலியில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துளள்து. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,588 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாண்டியாகோ: சிலியில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துளள்து. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,588 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 5-ம் தேதி ஒரு நாள் பாதிப்பு 3,685 பேருக்கு கரோனா பாதித்து சுமார் 5 மாதங்களுக்குப் பின் இன்று மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு 6,12,564 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து சிலியின் சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வெள்ளிக்கிழமையன்று கரோனாவுக்கு 52 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 16,660 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
கடந்த வாரத்தில் மட்டும் சிலியில் புதிய கரோனா பாதிப்பு 14 சதவீதம் அதிகரித்துள்ளது. 14 நாள்களில் 31 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில் ஜனவரி மாதத்தில் கரோனாவின் இரண்டாவது அலை வீசக் கூடும் என்றும் ஒரு நாள் பாதிப்பு 9 ஆயிரம் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.